Friday 11 May 2018
ஜிஎஸ்டி-யால் ஆட்சியை இழந்த தேசிய முன்னணி
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்திய ஜிஎஸ்டி-யை அமலாக்கம் செய்ததன் விளைவாகவே 60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த தேசிய முன்னணி இன்று ஆட்சியை இழந்து நிற்கிறது.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை கைப்பற்றி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியமைத்துள்ளது.
தேசிய முன்னணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) என கணிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் பொருளாதார ரீதியில் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்துள்ளதோடு அவர்களிடையே எதிர்ப்பலைகளையும் உருவாக்கியுள்ளது.
'நாங்கள் ஆட்சியமைத்தால் ஜிஎஸ்டி ரத்து செய்யப்படும்' என்ற பக்காத்தான் கூட்டணியின் வாக்குறுதியில் கவர்ந்த மலேசியர்கள் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டுள்ளனர்.
ஜிஎஸ்டி-யை அமலாக்கம் செய்த தேசிய முன்னணி இன்று ஆட்சியை இழந்து 'எதிர்க்கட்சியாக' திகழ்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment