Saturday, 12 May 2018

அஸ்ட்ரோவின் சூப்பர் ஸ்டார் போட்டியின் குரல் தேடல் விரைவில்




பாடுவதில் ஆர்வமா? உங்கள் பாடும் திறமை வெளிப்படுத்த சரியான வாய்ப்பாக காத்துக் கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக புதிய பரிணாமத்தோடு  திறமையான உள்நாட்டுப் பாடகர்களைக் கண்டறிந்து சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க வைக்க வருகின்றது அஸ்ட்ரோவின் சூப்பர் ஸ்டார் 2018.

இப்போட்டியின் குரல் தேர்வு நாடு தழுவிய நான்கு இடங்களில் நடைபெறவுள்ளது. இக்குரல் தேர்வில் பங்கெடுக்க விரும்புவார்கள் அஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தை நாடி தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். அந்த அகப்பக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்பு வைக்க வேண்டும்.

இப்போட்டியில் 18 முதல் 35 வயதுக்குள் உட்பட்ட மலேசியா அல்லது சிங்கப்பூர் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும். எதிர்வரும் மே 25-ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்தவார்கள் மட்டுமே இப்போட்டியின் குரல் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

குரல் தேர்வு நடைபெறும் விவரங்கள் கீழ்வருமாறு :-
·         பினாங்கு – ஜூன் 1 மற்றும் 2
·         பேராக் – ஜூன் 4 மற்றும் 5
·         ஜோகூர் – ஜூன் 7
·         கோலாலம்பூர் – ஜூன் 9 மற்றும் 10

மேல் விவரங்களுக்கு http://www.astroulagam.com.my/superstar2018 அகப்பக்கத்தை வலம் வருங்கள்.

No comments:

Post a Comment