Sunday, 13 May 2018

பேரா மந்திரி பெசாராக பதவியேற்றுக் கொண்டார் ஃபைசால் அஸுமு


ரா.தங்கமணி

கோலகங்சார்-
பேரா மாநிலத்தில் புதிய மந்திரி பெசாராக மாநில பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர்  அஹ்மாட் ஃபைசால் அஸுமு பதவி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

இங்குள்ள அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்பு சடங்கில் பேரா சுல்தான் நஸ்ரின் ஷா முன்னிலையில் அவர் இந்த பதவி உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்.

நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் 29 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே வென்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு தேசிய முன்னணியைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்ததால் 31 சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment