Friday 4 May 2018

தவறுதலாக தரையிறங்க முயன்ற விமானம்; பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது


சான் பிரான்சிஸ்கோ-
விமான தளத்தில் தரையிறங்க வேண்டிய விமானம், விமானங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இறங்க முற்பட்டதால் பெரும் விபத்து ஏற்பட்டு 1,000க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் விமானிகள் புத்திசாலித்தனமான நடவடிக்கையால் அந்த விபத்து தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ அனைத்துலக விமான நிலையத்தில் நிகழ்ந்தது.  டொராண்யோவிலிருந்து புறப்பட்ட ஏர் கனடா 759 விமானம் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை வந்தடைந்தது.
Advertisement

விமான நிலையத்தை வந்தடைந்தபோது ஓடுபாதையில் இறங்க வேண்டிய விமானம், அதற்கு பதிலக விமானங்கள் இறங்க வேண்டிய பாதையில் தவறுதலாக இறங்கியது.  அவ்விடத்தில் மட்டும் விமானம் தவறுதலாக இறங்கியிருந்தால் பெரும் விபத்து நிகழ்ந்திருக்கும்.

ஆனால் விமானிகள் துரிதமாக செயல்பட்டதால் விமானத்தை கீழிறக்காமல் மேலெழும்பச் செய்வதால் அந்த விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த தவறு எதனால் நடந்தது என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment