Friday, 4 May 2018

டத்தோ லீ சொங் வெய் பூப்பந்து அகாடமியில் விளையாட மூவருக்கு வாய்ப்பு- பேரா இந்தியர் பூப்பந்து மன்றம்


புனிதா சுகுமாறன்

ஈப்போ:
பேரா இந்தியர் பூப்பந்து மன்றத்தின் 41ஆவது ஆண்டாக நடைபெற்று வரும் பூப்பந்து போட்டியில் இந்த ஆண்டு நாடுதழுவிய அளவில் 710  விளையாட்டாளர்கள்  இப்போட்டியில் கலந்துக் கொண்டுள்ளனர்.

3 நாட்களாக நடைபெற்று வந்த இந்த  பூப்பந்துப் போட்டியில் இளம் விளையாட்டாளர்கள் சாதனை படைத்துள்ளனர் என்று பேரா இந்தியர் பூப்பந்து சங்கத்தின் தலைவர் என்.லோகநாதன் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் நடைபெறும் பூப்பந்து விளையாட்டு போட்டியில் இளம் தலைமுறையினர் அதிகம் கலந்துக்கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

பேரா இந்தியர் பொது பூப்பந்துப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மூன்று இளம் விளையாட்டாளர்கள் டத்தோ லீ சோங் வெய் பூப்பந்து அகாடமியில் பயிற்சிகள் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் முதல் முறையாக இந்த அங்கீகாரம் இளம் விளையாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று லோகநாதன் தெரிவித்தார்.

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற பூப்பந்துப்ட்டியில் டத்தோ லீ சோங் வெய்யின்  பயிற்றுனர் நேரில் வருகை புரிந்து பூப்பந்து விளையாட்டாளர்களின் திறமைகளை  ஆய்வு செய்த பின் மூன்று சிறந்த விளையாட்டாளர்கள் டத்தொ லீ சோங் வெய் அகாடமியில் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர் என்று தெரிவித்தார்.

ஈப்போ, ஜாலான் கோலாகங்சாரில்  உள்ள டத்தோ லீ சோங் வேய் பூப்பந்து அரங்கத்தில் இந்த பூப்பந்துப் போட்டி மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. இந்தியர் பூப்பந்து போட்டி 22 பிரிவுகளில் நடத்தப்பட்ட  இப்போட்டியில் 710 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர்
இப்போட்டியின் ஒற்றையர் பிரிவில்  அர்ஷாட் சிங், பிரதீஸ்,யோஷினி,மிஷாலினி,ஹரிராகவேந்திரா, கீர்த்திகா, தானியா நாயர், சனேஷன், யுவேந்திரன் ஆகியோர் வாகைச்சூடினர். இரட்டையர்  பிரிவில் வித்யாலட்சுமி,கிறிஸ்தபர் சன்ஷென், யுவென்ராஜ், தானியா நாயர் ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றி வாகை சூடினர்.

இப்பூப்பந்து போட்டியில் வெற்றி வாகை சூடிய போட்டியாளர்களுக்கு ஈப்போ பாராட் தொகுதி மஇகா தலைவர் டான்ஸ்ரீ ஜி. ராஜு , புந்தோங் தேமு   வேட்பாளர் திருமதி தங்கராணி , பேரா இந்தியர் பூப்பந்து சங்க தலைவர் லோகநாதன், அவர்தம் செயலவை உறுப்பினர்கள் அனைவரும்  பரிசு கோப்பைகளை எடுத்து வழங்கி ஊக்குவித்தனர்.

No comments:

Post a Comment