Wednesday 2 May 2018

மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் தொழிலாளர்கள் வளர்ச்சிக்கு செய்த சாதனைகள்


2008ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு இந்தியர்களின் முழு அமைச்சராகப் பதவியேற்றார். அந்த காலகட்டத்தில் துன் படாவி அவருக்கு மனிதவள அமைச்சரவையைக் வழங்கினார். மனிதவள அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்துக்கு ஒரு பொற்காலமாக இருந்தது.

குறிப்பாக இந்திய தொழிலாளர் சமூகம் B40 எனப்படும் குறைந்த வருமானம் பெற்ற இந்தியர்களுக்கு அவர் அமலாக்கம் செய்த குறைந்த பட்ச வருமானச் சட்டத்தின் வாயிலாக பாதுகாப்பும் வருமான உயர்வும் பெற்றனர். 

யுனிவர்சிட்டி உத்தாரா மேற்கொண்ட ஆய்வில் குறைந்தபட்ச வருமானச் சட்டத்தின் பிரதிபலனாக ஏறக்குறைய 2 லட்சம் இந்திய பாட்டாளி வர்க்கம் மாதாந்திர சம்பள உயர்வு கண்டுள்ளது. இந்த ஆய்வின்படி நாட்டில் உள்ள மூவினங்களை ஒப்பிடுகையில் இந்திய சமூகம் தான் இந்த சட்டத்தின் அமலாக்கத்தின்படி நன்மை அடைந்ததாகத் தெரிய வருகின்றது. காரணம் சீனர் சமூகம் தனித் தொழில் செய்யும் சமூகமாகவும், வணிகர்களாக இருக்கும் சமூகமாகவும் திகழ்கின்றது. மலாய்க்காரர் சமூகம் அரசாங்க பணியிலும் விவசாயிகளாகவும் மீனவர்களாகவும் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியத் தொழில் வர்கத்துக்கு இந்த சட்டத்தின் அமலாக்கத்தின் வழி யுபிஎம் ஆய்வின் படி இதுவரை RM 2 பில்லியன் அதிக வருமானம் ஈட்டியுள்ளதற்கு டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியமே காரணம்.

இதைத் தொடர்ந்து, அவர் மனிதவள அமைச்சராக இருந்தபோது தனியார் துறையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஓய்வுகாலம் 55 வயதிலிருந்து 60 வயதாக நீட்டித்தார். இதன் காரணமாக பல இந்தியர்கள் இன்னும் 5 ஆண்டு வருமானம் பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தித் தந்துள்ளார்.

சொக்சோவின் வழி தொழிலாளர் பாதுகாப்புக்கும், நலுனுக்கும் பல திட்டங்களை அமலாக்கம் செய்து தொழிலாளர் பாதுகாவலராகவே திகழ்கிறார். என்றும் நினைவில் இருப்பார்.

No comments:

Post a Comment