Monday, 7 May 2018

சூறாவளி பிரச்சாரத்தில் திருமதி தங்கராணி


புனிதாசுகுமாறன்

ஈப்போ:
கடந்த பத்தாண்டு காலம் எதிர்க்கட்சி  வசம் இருக்கும் புந்தோங் சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி  வசம் தற்காத்துத் கொள்ள தேமு வேட்பாளர் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை தொடங்கி திருமதி தங்கராணி மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தின்போது  புந்தோங், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற  சமய வகுப்பு நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் விரல் விட்டு எனும் நாட்களில்தான் நாட்டின் 14ஆவது போது தேர்தல் இருக்கின்றது.

நான் இங்கு வேட்பாளராக களமிறங்குவது புதிதுதான்.  ஆனால் புந்தோங்கில் மக்களுக்கு நான் அறிமுகமானவள்தான்.  இங்கு கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி உள்ள நிலையில் மக்கள் சிரமப்பட்டது போதும்.  உங்களது பிரச்சினைகளை தீர்க்க நான் வருகிறேன்.

நம் சமூகத்திற்கு தேசிய முன்னணி அரசாங்கம் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது, செடிக், சீட் மூலமாக பல ஆக்ககரமான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவாக அணி திரள வேண்டும் என அவர் சொன்னார்.

இந்த தொகுதியில் நான்  வெற்றி பெற்றால் புந்தோங் மக்களின் வாழ்வில் மேம்பாட்டை கொண்டு வருவதோடு   தொகுதியிலும் உருமாற்றத்தை கொண்டு வருவேன் என திருமதி தங்கராணி கூறினார்.

இந்நிகழ்வில் கலந்து  கொண்ட சமய வகுப்பு மாணவர்களுக்கு புக்கப்பை, பள்ளி உபகரணப் பொருட்கள் ஆகியவற்றை  ஆலயத் தலைவர் ஆர்.வி.சுப்பையா, செயலவை உறுப்பினர்கள், ஈப்போ பாராட் மஇகா தலைவர் டான்ஶ்ரீ கோ.இராஜு ஆகியோர் எடுத்து வழங்கினர்.

No comments:

Post a Comment