Saturday, 12 May 2018

அன்வாருக்கு பொது மன்னிப்பு; மாமன்னர் ஒப்புதல்- துன் மகாதீர்


கோலாலம்பூர்-
முன்னாள் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு வழங்க மாமன்னர் சுல்தான் முகமட் வி ஒப்புதல் வழங்கியுள்ளதாக பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

ஓரின புணர்ச்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் அவர் மீண்டும் அரசியலில் ஈடுபட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மலேசிய அமைச்சரவையில் ஈடுபடுவார் என அவர் கூறினார்.

தற்போது சுங்கை பூலோ சிறைச்சாலையில் உள்ள டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது தண்டனை காலம் முடிந்து ஜூன் 8ஆம் தேதி வெளிவருவார் என கூறப்பட்டது.

No comments:

Post a Comment