கடந்த 2004-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு சிகாமாட் மக்களின் மேம்பாட்டிற்காக டத்தோஸ்ரீ டாக்டர் ச.
சுப்பிரமணியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என்றால் மிகையாகாது.
பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு ,
இன்று சிகாமாட் மாவட்டம் குறிப்பாக ஜெமிந்தா, கிம்மாஸ் பாரு,
பத்து அன்னம், பூலோ காசாப் போன்ற வட்டாரங்கள் உருமாற்றம் கண்டுள்ளதை
கண்கூடாக காண முடிகிறது.
அவரது நற்சேவை இந்நாடாளுமன்றத்தில் தொடர வேண்டும் என்று
சிகாமாட் வாழ் மக்களால் பெரிது எதிர்ப்பார்க்கப்படுகின்ற வேளையில், இது வரையில் ரிம 3716,000.00 செலவில் தேசிய
மாதிரி நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் இடமாற்ற நிர்மாணிப்பு, அறிவியல் கூட நிர்மாணிப்பு, மண்டப நிர்மாணிப்பு, அதன்
இணைக்கட்டட நிர்மாணிப்பு பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனையடுத்து,
ஜெமிந்தா மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் ஆலய மண்டப நிர்மாணிப்புப் பணிகளும்
மேர்கொள்ளப்பட்டுள்ளன. ஜெமிந்தா வட்டார வீட்டு மறுசீரமைப்புப் பணிகளும்
திட்டமிட்டப்படி நிறைவுற்றுள்ளது.
கிம்மாஸ் பாரு வட்டார திட்டங்களுக்கு இதுவரையில் சுமார் ரிம. 4260,000.00
ஒதுக்கப்பட்ட வேளையில், தேசிய மாதிரி
போட்ரோஸ் தோட்ட தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க நிதி, இடமாற்ற நிர்மாணிப்பு, இணைக்கட்டட வசதி நிர்மாணிப்பு, பூப்பந்து வளாக நிர்மாணிப்புக்காக
அந்நிதிகள் செலவிடப்பட்டுளன. இதற்கிடையில்,
கிம்மாஸ் பாரு மகா மாரியம்மன் ஆலய மண்டப நிர்மாணிப்பு, தாமான் பிந்தாங் வலைப்பந்து மைதானத்தில்
மேடை மற்றும் மண்டப நிர்மாணிப்பு திட்டங்களுக்கும் நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.
கிம்மாஸ் பாரு வட்டார ஆலயம் மற்றும் அரசு சாரா இயக்க நிதியும் வழங்கப்பட்ட
வேளையில், கிம்மாஸ்
பாரு மற்றும் கோமாளி தோட்ட மின்சுடலை நிர்மாணிப்பணிகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிம்மாஸ் பாரு
வட்டார வீட்டு மறுசீரமைப்பு பணிகளின் திட்டங்களும் அடங்கும்.
பத்து அன்னம் வட்டாரத்திலும் பல திட்டங்கள்
நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, தாமான் டேசா
இந்திய மண்டபச் சீரமைப்பு, தேசிய மாதிரி
பத்து அன்னம் தமிழ்ப்பள்ளியின் நிர்மாணிப்பு,
கெனாங்கான் கிராமத்தில் சாக்கடை நிர்மாணிப்பு, சுங்கை செனாருட் தோட்ட மகா மாரியம்மன் ஆலய நிர்மாணிப்பு, கோமாளி தோட்ட மகா மாரியம்மன் ஆலய நிர்மாணிப்பு, தேசிய மாதிரி கோமாளி மற்றும் சுங்கை
செனாருட் தோட்டத் தமிழ்ப்பள்ளிகளின் நிர்மாணிப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பத்து அன்னம் வட்டார வீட்டு மறுசீரமைப்புப் பணிகளும் பல இடங்களில்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதே வேளையில்,
பூலோ காசாப்பிலும் பல மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, தேசிய மாதிரி சுங்கை மூவார் தோட்டத்
தமிழ்ப்பள்ளிக்கு 4 ஏக்கர்
நிலம், ஆலய மேம்பாட்டிற்காக
பூலோ காசாப் மகா மாரியம்மன் ஆலயதிற்கு 1 ஏக்கர்
நிலம், சுங்கை மூவார் தோட்ட
ஆலயம், கல்லறை நிர்மாணிப்பு
மற்றும் பூலோ காசாப் வட்டார வீட்டு மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது
குறிப்பிடத்தக்கது.
சிகாமாட் மாவட்டத்தில் ஆலய மேம்பாட்டிற்கு மட்டுமல்லாமல், சிகாமாட் மாவட்ட இந்திய மின்சுடலை நிர்மாணிப்பு
பணிகள் மற்றும் சிகாமாட் நாடாளுமன்ற கல்வி பணியகக் கட்டட நிர்மாணிப்புப்பணிகள்
மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற காலம் தொட்டு
டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் ஒவ்வொரு வாரமும் சிகாமாட்டிற்கு விஜயம் தருகிறார்.
நாடாளுமன்ற மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றி வரும் சிறந்த தலைவர் இருக்கும் போது
தேர்தலுக்காக திடீரென்று முளைத்திருக்கும் காளான்கள் நம்பி காத்திருக்க
விருப்பமில்லை என சிகாமாட் வாழ் இந்திய மக்கள் கருத்துப் பகிர்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment