ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே எஞ்சியுள்ள வேளையில் இவ்வாண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் பேசப்பட்டவராகவும் சமூக ஊடகங்களில் வைரலான தலைவராகவும் திகழ்கிறார் சுங்கை சிப்புட் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி.
டோவன்பி தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றிய டத்தோஶ்ரீ தேவமணி, 'ஐயா... அம்மா... தாயே' என மிகவும் பணிவுடன் வாக்கு கேட்டதை சமூக ஊடகங்களில் சிலர் படுமோசமாக விமர்சித்தும் இழிவாக பேசியும் தங்களது கருத்துகளை பதிவிட்டனர்.
ஆனால், அந்த மண்டபத்தில் குழுமியிருந்த தாய்மார்களையும் முதியோர்களையும் மதிக்கும் வகையில் 'ஐயா... அம்மா... தாயே...' என மிகவும் பணிவுடன் வாக்கு கேட்டதை 'பிச்சை கேட்பதாக' விமர்சித்து டத்தோஶ்ரீ தேவமணியை சாடினர்.
ஆனால், 'அம்மா.. தாயே...' என்ற வார்த்தையை கூட இழிவானதாக உருவாக்க முற்படுவது ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
சுங்கை சிப்புட்டில் களமிறங்கியுள்ள டத்தோஶ்ரீ தேவமணி தோல்வி கண்டாலும் அதனால் அவருக்கு எவ்வித நஷ்டமும் இல்லை; ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித மேம்பாடும் உருவாக்கமும் காணப்படாமல் அடிப்படை சூழலையும் மேம்படுத்தாமல் தவிக்கும் மக்களுக்கு தற்போதைய தீர்வு ஒன்றுதான்; 'தங்களது வாழ்க்கைச் சூழலை மாற்றக்கூடிய ஒரு மக்கள் பிரதிநிதி'தான்.
கடந்த கால தவறுகளை திருத்துவதற்காக பணிவுடன் பேசிய வார்த்தைகளை கூட இழிவுப்படுத்தும் நடவடிக்கை இங்குள்ள இந்திய சமுதாயத்தின் எதிர்கால நலனை பாதிப்புறச் செய்யலாம் என்பதை ஒருநிமிடம் சிந்தித்து பார்ப்போம்.
No comments:
Post a Comment