அரசியல்
என்னும் மாபெரும் கடலில் ஒரு காலதேவனால் தள்ளிவிடப்பட்ட ஒரு அரசியல்வாதி.டாக்டர்
சுப்பிரமணியத்தின் அரசியல் பயணம் ஆரம்பத்தில் ஒரு திட்டமிட்டபயணம் அல்ல. காரணங்கள் ஏதாயினும்
நல்லதே நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
2008ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் டாக்டர் சுப்பிரமணியம் ஒரு முழு அமைச்சராக ஆவதை எந்த அரசியல் ஆய்வாளரும் எதிர்பார்த்திருக்க முடியாது. 2008 தேர்தலுக்குப் பின் மஇகாவில் உள்ள அனைத்து மூத்த தலைவர்களும்
தோல்வியடைந்தது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றாகும்.
ஒரு
சிறந்த மாணவராகவும், தமிழ் உணர்வுள்ள குடும்பத்தில் வளர்ந்த மகனாகவும், ஒரு
சிறந்த மருத்துவராகவும் இருந்து இன்று தமிழ் சமுதாயத்திற்கு புத்துயிர் ஊட்டும்
வியூக அரசியல் தலைவராக திகழ்ந்து வருகின்றார்.
தூரநோக்கு
சிந்தனையுடன் ஆழ்ந்து சிந்தித்து எந்த முடிவையும் எடுக்கக்கூடிய மனோபாவம் உள்ள
மனிதர் என்றால் அதுமிகையாகாது. நமது
இனத்தின் வாழ்வாதார சூழ்நிலையை மாற்றி அமைப்பதற்கு ஆராவாரமில்லாமல் அமைதியாக
செயல்பட்டு வரும் ஒரு மாபெரும் தலைவர்.
ஒரு
சட்டத்தின் வாயிலாக சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கி தான் அதைப் பற்றி எதுவுமே
அரசியலுக்காக பேசாத ஒரு முதிர்சியடைந்த மனிதர். அவர் முயற்சியால் அமலாக்கத்திற்கு வந்த
குறைந்தபட்ச வருமான சட்டம், ஒரு பல்கலைக்கழகத்தின்
ஆய்வின்படி தமிழ் இனத்தின் 2 லட்சம் பேருக்கு கடந்த 8
வருடங்களில் 2 பில்லியன் அதிக வருவாய்
ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கிறது. இது
மாபெரும் தலைவரின் மாபெரும் சாதனைதானே!
அரசாங்க
அமைப்பின் கீழ் இந்தியர்களின் வளர்ச்சித் திட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்ற
நோக்கத்தோடு மற்ற இனத்திற்கு எல்லாம் இல்லாத அமைச்சரவை சிறப்புக்குழுவை அமைத்துத்
தந்த சாணக்கியத் தலைவர்.
அதன்
விளைவாக சமுதாயத்தின் மறுமலர்ச்சி அரசாங்கத்தின் பொறுப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. SEED,
SEDIC, SITF, TEKUN போன்ற அரசாங்க அமைப்புகள் அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் திட்டங்களும் அமலாக்கத்திற்கு வந்துவிட்டது.
வசந்தகாலம்
வந்து கொண்டு இருக்கிறது. சமுதாயம் இப்பொழுது எடுக்க வேண்டிய முடிவுகள் எல்லாம் வெற்றி இலக்கை
நோக்கி செல்லும் ரயில் புறப்பட்டு விட்டது. இந்த பயணம் அடுத்த
10 ஆண்டுகளில் நமது சமுதாயம் நாட்டில் கல்வி, பொருளாதாரம், அரசியல் என அனைத்து நிலைகளிலும்
தலைநிமிர்ந்து நடக்கும் சமுதாயமாக மாறிவிடும்.
தயாராக
இருக்கும் ரயிலில் ஏறுவதை விட்டு விட்டு வராத ரயிலுக்கு காத்திருப்பது
புத்திசாலித்தனம் அல்ல.
No comments:
Post a Comment