Sunday, 13 May 2018

புதிய அரசாங்கத்திற்கு துணை நிற்போம்- கேசவன்


ரா.தங்கமணி

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு பேரா இந்திய வர்த்தக சபை தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

மலேசியர்களின் அதிக ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள பக்காத்தான் கூட்டணியின் பிரதமராக பதவியேற்றுள்ள துன் மகாதீர் முகமதுவுக்கு வாழ்த்துகளை கூறி கொள்ளும் வேளையில்  இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு பக்காத்தான் கூட்டணி வழிகோல வேண்டும்.

பொருளாதார நிலையிலும் சமூக அடிப்படையிலும் இந்தியர்களின் மேம்பாடு உறுதி செய்யப்படுவதற்கு இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய தலைவர்கள் ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதோடு புதிய அரசாங்கத்தின் திட்டங்களுக்கு பேரா இந்திய வர்த்தக சபை என்றும் துணையாக இருக்கும்  என்று இச்சபையின் முன்னாள் தலைவரும் மூத்த உறுப்பினருமான எம்.கேசவன் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment