Friday, 11 May 2018

இன்று பிரதமராக பதவியேற்கிறார் துன் மகாதீர்


கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றியுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இன்று மாலை 5.00 மணியளவில் இஸ்தானா நெகாராவில் துன் மகாதீர் பிரதமராக பதவியேற்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.

நாட்டின் பேரரசர் முன்னிலையில் பிரதமராக பதவியேற்கும் துன் மகாதீர், பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் மக்கள் நலன் காக்கப்படும் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment