Saturday, 12 May 2018

மக்களின் அடிப்படை பிரச்சனைகளை களைவேன்! – கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சூ கியோங் சியோங்



கம்பார் 
14ஆவது பொதுத் தேர்தலில் கம்பார் நாடாளுமன்றத்தில் டத்தோ லீ சி லியோங்கை ஏதிர்த்து போட்டியிட்ட சூ கியோங் சியோங் என்ற தோமஸ் சூ 11,801 வாக்குகள் பெரும்பான்மையில் ஆபார வெற்றி பெற்றார். 

சுமார் 30,216 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இவரை ஏதிர்த்த போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ லீ சி லியோங் 18,415 வாக்குகளும் பாஸ் கட்சி வேட்பாளர் யோகன் மஹாலிங்கம் 3,864 வாக்குகள் பெற்று தோல்வி கண்டனர்.

மேலும், நம்பிக்கை கூட்டணி வெற்றியை தொடர்ந்து, கம்பார் வட்டார மக்களின் அடிப்படை பிரச்சனைகளையும் நிலப் பிரச்சனைகளையும் முதலில் களையவுள்ளதாக பாரதம் மின்னியல் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் குறிப்பிட்டார்.

வாக்களிப்பு பதிவு செய்யும் பொதுமக்கள்

மக்கள் பல வருடக்காலமாக நிலப் பிரச்சனையின் காராணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பிரச்சனை நான் இன்று பார்க்கவில்லை 20 ஆண்டுகளுக்கு முன்பை சந்தித்த ஒன்று ஆனால் இப்போதும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. எனது முதல் கட்டமாக இந்த நிலப் பிரச்சனை களைவதும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவேன்.

வெற்றிக்கு காரணமாகவும் எனக்கு உதவி நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், பிரச்சாரக்காலங்களில் உதவிய அனைத்து உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கியவர்களுக்கும் எனக்கு வாய்ப்பளித்த கம்பார் வாழ் மக்களுக்கும் எனது இதயங்களிந்த நன்றி என கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சூ கியோங் சியோங் தெரிவித்தார்.

கம்பாரை விட்டு வெளிநாடுகளில் பணிக்காக சென்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பும் அவர்களை மீண்டும் கம்பாருக்கு வரும் அளவில் கம்பாரின் பொருளாதார நிலை மாறும் அதற்கான பணிகளையும் திட்டங்களும் விரைவில் நான் செய்வேன் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குடும்பத்துடன் வாக்களித்த கம்பார் வாக்காளர்கள்

No comments:

Post a Comment