Wednesday 2 May 2018

மலேசிய தங்கும் விடுதி பொறியிலாளர்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா


MHEA எனும் மலேசிய தங்குவிடுதி பொறியிலாளர்கள் சங்கம் முதல் முறையாக மின்சார பொருட்கள் கண்காட்சியை நடத்தியது. இக்கண்காட்சி, இம்மாதம் 20 ஆம் தேதி, தலைநகர் வி.இ. தங்கும் விடுதியில் நடைபெற்றது. சுமார் 5௦க்கும் மேற்பட்ட மின்சார பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றதாக மலேசிய தங்கும் விடுதி பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் அவ் தெரிவித்தார்.


முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்ட இக்கண்காட்சியில் 200 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
பொறியிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஓரிட மையமாக அமைக்கப்பட்ட இச்சங்கம், பல சமுக கடப்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் பொறியியலாளர் துறையில் காணப்படும் தற்போதைய நவீன மாற்றங்கள், வியூகங்கள் குறித்த விளங்கங்கள் குறித்தும் அதன உறுப்பினர்களுக்கு அவ்வப்போது வழங்கப்படுகிறது.


நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை மலேசிய தங்கும் விடுதி பொறியிலாளர்கள் சங்கம் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment