Sunday, 13 May 2018

நாட்டை விட்டு வெளியேற டத்தோஶ்ரீ நஜிப், ரோஸ்மாவுக்கு தடை


கோலாலம்பூர்-
நாட்டை விட்டு வெளியேற முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், அவரின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விருவருரின் பெயர்களும் கறுப்புப் பட்டியல் இடப்பட்டுள்ளது குடிநுழைவு துறை அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது.

விடுமுறை உட்பட எவ்வித நடவடிக்கைகளுக்காகவும் அவர்கள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது என அவ்வறிக்கையில் கூறப்பட்டது.
நாட்டின் 14ஆவது தேர்தல் முடிவில் தேசிய முன்னணி அரசாங்கம் படுவீழ்ச்சியை கண்டதை அடுத்து ஆட்சி அதிகாரத்தை இழந்தது.

புதிய அரசாங்கத்தை பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றியுள்ள நிலையில் நாட்டின் 7ஆவது பிரதமராக துன் மகாதீர் முகம்மது பதவியேற்றார்.

No comments:

Post a Comment