Saturday, 12 May 2018
பேராவில் எதிர்க்கட்சி இல்லாத 'கூட்டமைப்பு' ஆட்சி- பாஸ் கோரிக்கை
ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ள பேரா மாநிலத்தில் எதிர்க்கட்சி இல்லாத கூட்டமைப்பு ஆட்சி அமைய வேண்டும் என பாஸ் கட்சி கோரியுள்ளது.
தற்போது சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள பாஸ், பக்காத்தான் ஹராப்பான், தேசிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என இன்று கூடிய பாஸ் உச்சமன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக டத்தோஶ்ரீ அப்துல் ஹடி அவாங் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்களாக அதிகமான முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ளதால் ஆட்சிக்குழுவில் முஸ்லிம்கள் அதிகமாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment