Friday 11 May 2018

மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம்- டத்தோஶ்ரீ நஜிப்



கோலாலம்பூர்-
ஜனநாயகத்தை மதிக்கும் அதே வேளையில் மக்கள் அளித்துள்ள தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

இன்று காலை தொலைகாட்சியின் வழி நேரலையாக உரையாற்றைய டத்தோஶ்ரீ நஜிப், நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம். இதன்வழி நாட்டின் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என கூறினார்.

நாட்டின் அடுத்த பிரதமரை நியமனம் செய்யும் அதிகாரம் மாமன்னரை பொறுத்தது என கூறிய அவர், நேற்று தேசிய பாதுகாப்பு மன்றத்தின் கூட்டம் நடைபெறவில்லை எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment