Wednesday, 2 May 2018

பிரதமர் நஜிப் 'கட்- அவுட்'டுக்கு பாலாபிஷேகம்- சமய மரபை மீற வேண்டாம்


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் பரபரப்பு தினந்தோறும் கூடி கொண்டிருக்கிறது.

தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணி, பாஸ், பிஎஸ்எம்  மட்டுமல்லாது சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது பிரச்சாரத்தை தீவிரமாக்கியுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் மிகுந்த பரபரப்பை உண்டாக்கி வருகின்றன.

இந்து சமயத்தில் தெய்வ விக்கிரகங்களுக்கு மட்டுமே பாலாபிஷேகம் செய்யப்படும் நிலையில் இந்தியாவில் அரசியல் தலைவர்களுக்கும் சினிமா உச்சநட்சத்திரங்களுக்கு பாலாபிஷேகம் செய்யப்படும்.

நம் நாட்டின் இல்லாத இந்த கலாச்சாரத்திற்கு நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் 'கட்- அவுட்'டுக்கு அவரது ஆதரவாளர்கள் என நம்பப்படும் சிலர் பாலாபிஷேகம் செய்யும் வீடியோ காணொளி  சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

சமய மரபை மீறும் வகையில் இச்செயல் அமைந்துள்ளது என சிலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அரசியல் தலைவர்களின் படங்களுக்கு பாலாபிஷேகம் செய்வது சமயத்திற்கு முரணானது எனவும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரக்கூடாது எனவும் சமய இயக்கங்கள் உட்பட சமூக ஆர்வலர்களும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment