ரா.தங்கமணி
ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் 29 இடங்களை கைப்பற்றியுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பேராவில் ஆட்சியமைக்க கோரி பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை கிந்தா அரண்மனயில் அதன் தலைவர்கள் சந்திக்க வருகின்றனர்.
இழுபறி நிலை நீடிக்கும் பேராவில் ஆட்சியமைக்கும் வகையில் சுல்தானை சந்திக்க பக்காத்தான் தலைவர்கள் அரண்மனை வருகின்ற நிலையில் அரண்மனைக்கு வெளியே அதன் ஆதரவாளர்கள் திரண்டு கோஷம் எழுப்பி வருகின்றனர்.
நடந்து முடிந்த தேர்தலில் பேராவில் 29 சட்டமன்றத் தொகுதிகளை பக்காத்தான் ஹராப்பானும் 27 சட்டமன்றத் தொகுதிகளை தேசிய முன்னணியும் 3 சட்டமன்றத் தொகுதிகளை பாஸ் கட்சியும் கைப்பற்றியுள்ளன.
27 இடங்களை கைப்பற்றியுள்ள தேமு 3 இடங்களை கைப்பற்றியுள்ள பாஸ் கட்சியிட்ன இணைந்து ஆட்சியமைக்கும் என நேற்று பேரா தேமு அறிவித்தது.
No comments:
Post a Comment