Thursday, 10 May 2018

60 ஆண்டுகால அரசியலை மாற்றி எழுதியது 'மக்கள் சுனாமி'


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
60 ஆண்டுகால மலேசிய அரசியலை மக்கள் சுனாமி திருத்தி அமைத்துள்ளது. உலக நாடுகளிலேயே மிக நீண்டகாலமாக ஆட்சி புரிந்த தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு விடை கொடுத்து புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளனர் மலேசிய வாக்காளர்கள்.

நேற்று நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை கைப்பற்றிய மக்கள் கூட்டணி, புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ள நிலையில்  'மக்கள் சுனாமி' புதிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.

மிகவும் பரபரப்பாகவும் எதிர்பார்ப்பையும் கூட்டிய இந்த தேர்தல் முடிவுகள் மிக காலதாமதாக அறிவிக்கப்பட்ட போதிலும் மாற்றத்திற்கான தங்களுடைய ஆட்சி அமைக்கப்பட்டதை  மலேசியர்கள் சீக்கிரமே அறிந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

நாடு சுதந்திரமடைந்த 1957ஆம் ஆண்டு முதல் தேசிய முன்னணியே மலேசியாவை ஆட்சி புரிந்து வந்த நிலையில் 14ஆவது பொதுத் தேர்தல் அதன் தலையெழுத்தையே மாற்றி அமைத்துள்ளது 'மக்கள் சுனாமி'.

No comments:

Post a Comment