கோலாலம்பூர் -
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் தீபகற்ப மலேசியாவில் பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு பெருகி கொண்டு வருவதாக மெர்டேக்கா சென்டரின் கருத்து ஆய்வு கூறுகிறது.
வேட்புமனுத் தாக்கலுக்கு பின்னர் பாஸ் கட்சிக்கான மலாய்க்காரர்களின் ஆதரவு 27 விழுக்காட்டிலிருந்து 20.9 விழுக்காடு சரிவு கண்டுள்ளது. அதே வேளையில் தேசிய முன்னணிக்கான ஆதரவு 1.8 விழுக்காடு குறைந்த போதிலும் இதனால் தேமுவுக்கு பாதிப்பில்லை.
20 விழுக்காடாக இருந்த மலாய்க்காரர்களின் ஆதரவு ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலுக்கு பின்னர் 27 விழுக்காடு ஆதரவு பக்காத்தான் ஹராப்பானுக்கு கிடைத்துள்ளது என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
Advertisement
மலாய்க்காரர்களின் 34 விழுக்காடு ஆதரவு கிடைக்கப்பெற்றாலே தீபகற்ப மலேசியாவில் உள்ள 165 நாடாளுமன்றத் தொகுதிகளில் 100 தொகுதிகளை பக்காத்தான் கூட்டணி கைப்பற்ற முடியும் என அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment