Sunday 13 May 2018

3 அமைச்சர்களை அறிவித்தார் துன் மகாதீர்


கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் அமைச்சர்களை பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று அறிவித்தார்.

அதில் நிதியமைச்சராக ஜசெகவின்  தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், தற்காப்பு அமைச்சராக அமானா கட்சியின் தலைவர் முகமட் மாட் சாபு, உள்துறை அமைச்சராக டான்ஶ்ரீ முஹிடின் யாசின் ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாக துன் மகாதீர் அறிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் 10 அமைச்சர்களில் தற்போது மூவர் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் ஏழு பேர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment