Saturday, 5 May 2018

22 சிறு தொழில் வர்த்தகர்களுக்கு இந்திய வர்த்தகர் விருது பெற்றனர்



நாட்டின் சிறு தொழில் வர்த்தகர்களை அங்கீகாரிக்கும் வகையில் இந்திய வர்த்தகர் விருது விழா 6ஆவது ஆண்டாக நடைப்பெற்றது. இதில் சிறு தொழில் வர்த்தகர்கள் தங்களின் வர்த்தகத்தில் வெற்றி நடைப்போடுபவர்களுக்கும் அடுத்த இலக்கை அடைந்தவர்களுக்கும் எஸ்.எம்.பி. எனும் சிறு தொழில் வர்த்தகர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு அண்மையில் ஸ்ரீ கெம்பாங்கானிலுள்ள கிராண்ட் பால்ரோமில் மிகச் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்தியர் வர்த்தகச் சபையின் தலைவர் டத்தோ டாக்டர் வி.சண்முகநாதன், 1 மைன் தலைவர் டத்தோ எஸ். கோபிநாத், ஏ.கே.எஸ் குழுமத் தலைவர் டத்தோ டாக்டர் ஸ்ரீ எஸ். ஏ.கே.எஸ் சக்திவேல், இண்டர் வோர்ல்ட் லோஜிஸ்திக் குழுமத்தலைவர் டத்தோ பிரபாக்காரன், ஆர்.எம்.கே. லோஜிஸ்திக் சபா குழுமத்தலைவர் ரவிந்திரன், தோட்டல் பியுட்டி ஃபோர் யு உரிமையாளர் சைலாஜா, மயுரா கிரியஸ்சன்ஸ் எண்டர்பிரைஸ் உரிமையாளர் சங்கர் நாகர் ரெத்தினர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக வருகையாளித்தனர்.


இந்தியர்கள் தங்களின் வர்த்தகத்தில் சிறப்பான வரவேற்ப்பை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமான இந்தியர்கள் தங்களின் வர்த்தகத்தை தொடங்கியுள்ளனர். குறிப்பாக சிறு தொழில் வர்த்தகர்கள் புது வகையான வர்த்தகங்களும் வித்தியாசமான அனுகுமுறையிலும் தங்களின் வர்த்தகத்தை மேம்படுத்தி வருகின்றனர். 

இதுபோன்ற விருது விழாவின் வழி அதிகமான வர்த்தகர்களை கண்டறிய முடிகின்றது. இது எங்களின் முயற்சியாக இருந்தாலும் இந்த விழாவை மேலும் மெருகூட்டுவதற்கு வர்த்தகத்தில் நம் சமுதாயத்தை வழிகாட்டும் சிறப்பு பிரமுகர்களின் கையில் விருது வழங்கி கெளரவிக்கிறோம் என்று நிகழ்வு ஏற்ப்பட்டாளர் ஞானபிரகாசம் வரவேற்ப்புரையில் குறிப்பிட்டார்.


இதனை தொடர்ந்து, 22 துறைகளை சார்ந்த 22 வர்த்தகர்களுக்கு சிறப்பு பிரமுகர்கள் விருது வழங்கி கெளரவித்தனர். அதில் லாலிஸ் பிரைடல் எண்ட் பியுட்டி உரிமையாளர் லலிதா செல்வராஜா, நிஷா பியுட்டி எண்ட் பிரைடல் அகெடடைமி உரிமையாளர் டேவிலிஷ ராமிநேசன், கிரேஸ் எண்ட் கிளாமர் பியுட்டி ஸ்பாவைச் சேர்ந்த கோகிலா பார்த்திபன் மற்றும் மலர் சந்திரன், ஸ்ரீமதி சரதாகிருஷ்ணா கலாமண்டபம் உரிமையாளர் ஸ்ரீமதி கிருஷ்ணன், பாப்லிக் கிளோபல் மேனஜ்மேண்ட் கோபால் வர்மா ராமுலு, திஆர்வோய்எஎம் எண்டர்பிரைஸ் உரிமையாளர் அரிக்கிருஷ்ணன் மற்றும் ரேவதி, ஹுஸ்த்லேர்ஸ் வேடிங் இவண்ட் மேண்ஜ்மேண்ட் நிருவன உரிமையாளர் லோகநாதன், கிரேட் எண்ட் கோல்ட் டாண்ஸ் அகிடைமி உரிமையாளர் ராயப்பன் அல்ஃப்ரெட், ஃபிகர் 8 பிட்நேஸ் எண்ட் டாண்ஸ் ஸ்துடியோ உரிமையாளர் ஜெயா ராணி தண்ணிமலை, ஆர். இவண்ட் கிரேயெஸின்ஸ் ரவி சுப்ரமணியம் மற்றும் கவிதா கிருஷ்ணன்,
 அருள் ஃபைன் ஆர்ட்ஸ் அல்லி மலர் முரசு நெடுமாறன், பிரானவிஸ் இவண்ட் எண்ட் மேனஜ்மெண்ட் உரிமையாளர் விக்னேஸ்வரன் படிவேல், ஜயண்ட் ஸ்டார் கேனோபி சேர்விஸ்சஸ் சயிலா பிரபாகரன், தின் என் வேல்டிங் வோர்க்ஸோப் உரிமையாளர் தினாகரன் ஆறுமுகம் படயாட்சேய், கிருஷ்ணன் பாரத நடனப்பள்ளி கிருஷ்ணன் மாணிக்கம் வித்யாலாயா, யாட்வி டி வேடிங் பெலஸ் உரிமையாளர் குமரன் ஆறுமுகம், சிவ மயம் காஸ்கேட் எண்டர்பிரைஸ் உரிமையாளர் பிரகாஷ் கிருஷ்ணன் மற்றும் யுனேஸ்வரி, நாத்யாஞசலி ஆர்ட்ஸ் அகெடைமி கோகிலன், மயுரா கிரியஸ்சன்ஸ் எண்டர்பிரைஸ் உரிமையாளர் சங்கர் நாகர் ரெத்தினர், தோட்டல் பியுட்டி ஃபோர் யு உரிமையாளர் குமரன் மற்றும் சைலஜா, ஸ்ரீ ஈஸ்வரா உணவகம் மற்றும் கேத்தரஸ் உரிமையாளர் லோகநாதன் சிவசாமி ஆகியோருக்கு சிறுத்தொழில் வர்த்தகர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.



மேலும் இந்த விருது விழாவின் சிறப்பு அங்கமான எஸ்.எம்.பி. கெளரவ விருது முதன் முறையாக அறிமுகம் கண்டது. இந்த விருதை இண்டர் வோர்ல்ட் லோஜிஸ்திக் குழுமத்தலைவர் டத்தோ பிரபாக்காரன் இராஜேந்திரனுக்கு அனைத்து சிறப்பு பிரமுகர்களும் ஒன்றிணைந்து வழங்கி கெளரவ விருதுக்கு மேலும் கெளரவம் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வை ஒவ்வோரு ஆண்டும் சிறப்பாக நடத்தி வருவது விவி கிரண்ட் எண்டர்டைன்மேன் உரிமையாளர்கள் ஞானபிரகாசம் பெருமாள் மற்றும் மாலதி நாகேந்திரம் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment