Friday 18 May 2018

17ஆவது ஆண்டாக இறைவன் இல்லத்தின் அன்னையர் தின விழா



கிள்ளான், தாமான் ஆலாம் ஷாவிலுள்ள இறைவன் இல்லத்தில் 17ஆவது ஆண்டு அன்னையார் தின விழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 20.5.2018 காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அன்னையர்களை சிறப்பித்து அவர்களுக்கு பாத பூஜை செய்து கெளரவிக்கவுள்ளனர். அன்னையர்களின் பங்களிப்பையும் சேவைகளையும் பாராட்டி மரியாதை நிமிர்த்தமாக கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து இந்நிகழ்வை செய்து வருகின்றனர். அவர்களை கெளரவிக்கவும் அவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளாக பல திட்டங்கள் தீட்டியுள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர் கைலாசம் குறிப்பிட்டார். இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகையாளராக அமானா கட்சியின் மகளிர் தலைவி டாக்டர் சித்தி மாரியா பிந்தி மாமுட் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் அவர்களுக்காக சிறப்பான அங்கங்களும் உள்ளதாக அவர் மேலும் கூறினார். மேல் விபரங்களுக்கு கைலாசம் (ஆலோசகர்) 019-2235180, ரவி (தலைவர்) 012-2012684, நவ (செயளாலர்) 012-3694451 அவர்களை தொடர்க் கொள்வோம்.

No comments:

Post a Comment