பெட்டாலிங் ஜெயா-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு மே 9ஆம் தேதி கூடுதல் பொது விடுமுறையாக அறிவிக்கப்படுவதாக புத்ராஜெயா தெரிவித்துள்ளது.
14ஆவது பொதுத் தேர்தலில் மலேசியர்களி தங்களது வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இந்த சிறப்பு விடுமுறை அறிவிக்கப்படுவதாக பிரதமர் துறை இலாகா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பொது விடுமுறை தீபகற்ப மலேசிய மலேசியாவையும் லாபுவான் மாநிலங்களையும் உள்ளடக்கியுள்ள நிலையில் சபா, சரவாக் மாநிலங்கள் தங்களது மாநிலங்களில் சிறப்பு விடுமுறையை அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment