செய்தி - படங்கள் : மோகன்ராஜ் வில்லவன்
மலேசிய இந்திய நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்கள் சங்கம் கடந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கத்தின் வழி
நாட்டில் சிறப்பாக வளர்ந்து வரும் வர்த்தகர்களை மெருக்கூட்டவும் அவர்களுக்கு
அங்கீகாரம் வழங்கும் வகையில் அவர்களுக்கான முதலாவது மலேசிய இந்திய நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் விருது விழா பூச்சோங், ஃபோர் போய்ண்ட் (Four
Point by Sheraton) யில் வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி இரவு 6 மணிக்கு மிக விமர்சியாக நடைபெறவுள்ளது.
இச்சங்கத்தில் 200க்கும் மேற்ப்பட்ட
உறுப்பினர்கள் உறுப்பியம் பெற்றுள்ளனர். இதில் நிகழ்ச்சி ஏற்ப்பட்டாளர்களும்
ஒருங்கிணைப்பாளர்களும் நிகழ்வு சார்ந்த துறையினர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். முறைப்படி
தங்களது நிறுவனத்தை பதிவுச் செய்தவர்கள் உறுப்பினர்களாக தங்களின் நிறுவனத்தை
பதிவுச் செய்துக் கொள்ளலாம். இதில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு வர்த்தக
வாய்ப்பையும் அவர்களுக்கான வர்த்தக வலைத்தளத்தையும் உருவாக்கி தருகின்றனர்.
அந்த வகையில், நமது
இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அங்கீகாரம் செய்யும் நிகழ்வாக எம்.ஐ.ஏ.இ விருது
விழா முதல் முறையாக அறிமுகப்படுத்துகின்றனர். இதன் வழி தங்களின் வர்த்தகத்தை
சிறப்பாகவும் புத்தாக்க சிந்தனையும் மிகச் சிறப்பாக இந்திய நிகழ்ச்சி
ஏற்ப்பட்டாளர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் வர்த்தகத்தை வளம் பெற செய்து
வர்த்தகத்தில் மிளிர ஒரு தளமாகவும் இந்த விருது விழா அமையும் என்றும் இதன் தலைவர் வண்டர்ஸ்
சிவா குறிப்பிட்டார்.
இந்த விருது விழாவில்,
சிறந்த ஒப்பனையாளர், சிறந்த அலங்காரம்,
சிறந்த கேத்தரிங், சிறந்த புகைப்படக் கலைஞர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த டி.ஜே அமைப்பு, சிறந்த பொழுதுப்போக்கு, சிறந்த கூடாரம், சிறந்த நிகழ்வு மேலாண்மை என்ற விருதுகளுக்கு விருது வழங்கி
சிறப்பிக்கபடவுள்ளனர். இது சார்ந்தத் துறையினர்களுக்கு விருது வழங்குவது
மட்டும்மில்லாது அவர்களை அங்கீகாரப்படுத்துவதற்க்காகவும் என்று அவர் மேலும்
கூறிப்பிட்டார்.
இதற்கிடையில்,
இச்சங்கம் நமது வர்த்தகர்களுக்கு இவ்வாண்டுக்கான பல திட்டங்களை வரைந்துள்ளனர்.
அதில் இந்தியா, டெல்லிக்கு வர்த்தக சந்திப்பு, வியாபார கண்காட்சி, விற்பனை சந்தை, இளையோருக்கான வேலை வாய்ப்பு, தொழில் கல்வி பயிலும்
மாணவர்களுக்கான பயிற்சியும் வேலை வாய்ப்புகள் என பல திட்டங்களை வரைந்துள்ளனர் சங்க
செயலவையினர். கடந்த ஆண்டு சீனாவுக்கு வியாபாரச் சந்தைக்கான வர்த்தகர்கள் சந்திப்பு
நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் தொழில் கல்வி பயின்ற
மாணவர்கள் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் சுய வியாபாரத்தை தொடங்குகின்றனர்.
ஆனால், சரியான வாய்ப்புகளும் பயிற்சிகளும் இல்லாத காரணத்தால் அவர்களை
கண்டறிந்து அவர்களுக்கு முறையான வியாபார திறன்களையும் அவர்களுக்கான
வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருவதற்கான தளத்தை உருவாக்குவதே இச்சங்கத்தின்
இலக்கு என்று அவர் மேலும் கூறினார். ஆர்வமுள்ள வர்த்தகர்கள் இச்சங்கத்தில் இணைந்துக்
கொள்ள விரும்புபவர்கள் சங்கத்தின் https://www.miae.com.my/ எனும்
அகப்பக்கத்தின் வழி தொடர்புக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment