Saturday, 7 April 2018

பேராக் சட்டமன்றம் நாளை கலைக்கப்படும்- டத்தோஶ்ரீ ஸம்ரி



ஈப்போ-
நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை அடுத்து பேராக் சட்டமன்றமும் நாளை கலைக்கப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தெரிவித்தார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அறிவித்தார்.

அதனையடுத்து மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்படும் எதிர்பார்க்கப்படும் வேளையில் நாளை காலை 11.00 மணிக்கு  பேராக் சுல்தான் நஸ்ரின் முயிஸுடின் ஷாவை அதிகாரப்பூர்வமாக சந்தித்து சட்டமன்றத்தை கலைப்பதற்கான அனுமதி பெறவிருப்பதாக கூறிய டத்தோஶ்ரீ ஸம்ரி, நாடாளுமன்ற நடைமுறைக்கு ஏற்ப மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment