கோலாலம்பூர்-
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்குடனான சந்திப்புக்கு பின்னர் தேசிய முன்னணியுடனான கூட்டணி மறுபரிசீலிக்கப்படலாம் என மைபிபிபி
கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கூறினார்.
பல ஆண்டுகளாக சேவையாற்றியுள்ள கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மைபிபிபி கோரி வருகிறது.
நடந்து முடிந்த கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் தேமுவுடனான கூட்டணி நீடிப்பதற்கு முடிவு காணப்பட்டது. ஆயினும் தொகுதி பங்கீடுகள் குறித்த முடிவு காண்பதற்கு முன்னர் தேமு தலைவருடன் நடத்தப்படும் இறுதி கூட்டத்திற்கு பின்னர் கூட்டணி குறித்து மறுபரிசீலிக்கப்படலாம் என நேற்று மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
சுயேட்சையாக போட்டியிடுவீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டான்ஶ்ரீ கேவியஸ், பிற வேட்பாளர்களை காட்டிலும் தேசிய முன்னணி வேட்பாளருக்கே அங்கு அதிகமான வெற்றி வாய்ப்பு தெரிகிறது.
வேறு எதையும் கவனத்தில் கொள்வது சரியல்ல என டான்ஶ்ரீ கேவியஸ் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment