ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
தனது பதவி விலகல் கடிதத்திற்கு மைபிபிபி உச்சமன்றம் இதுவரை எவ்வித பதிலும் அளிக்காததால் அக்கடிதத்தை தாம் மீட்டுக் கொள்வதாகவும் மைபிபிபி கட்சிக்கு தாமே தேசியத் தலைவர் எனவும் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் அதிரடியாக அறிவித்தார்.
கட்சியிலிருந்து தாம் விலகுவதாக கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மைபிபிபி உச்சமன்றத்திற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் எனது விலகல் கடிதத்தை ஏற்காத உச்சமன்றம், தன்னை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.
கட்சியின் சட்டவிதிகளை முறையாக பின்பற்றாமல் தன்னை நீக்கியிருப்பதாக கூறுவது ஏற்புடையதாகாது. ஒரு தலைவரை நீக்க வேண்டுமானால் கட்சி அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டும்.
ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை பிரிவு நடவடிக்கை எடுக்கிறது என்றால் 7 நாட்களுக்கு முன்னதாக கடிதம் வழங்க வேண்டும். குறைந்தது 2 நாட்களாவது கடிதம் வழங்க வேண்டும்.
வரையறுக்கப்பட்டுள்ள சட்டவிதிகளை பின்பற்றாமல் ஏனோ தானோ என உச்சமன்றம் எடுத்துள்ள முடிவு ஏற்புடையதாகாது. நான் வழங்கிய பதவி விலகல் கடிதத்திற்கும் எவ்வித பதிலும் உச்சமன்றம் அளிக்காததால் அக்கடித்தத்தை மீட்டுக் கொள்கிறேன்.
ஆதலால் இப்போது மைபிபிபி கட்சிக்கு நானே தேசியத் தலைவர் என டான்ஶ்ரீ கேவியஸ் அறிவித்தார்.
No comments:
Post a Comment