புத்ராஜெயா-
2003ஆம் ஆண்டு காலமான எம்.எம்.நாராயணன் நாயர் என்பவரின் பெயர் இன்னமும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து ஆராயப்பட்ட பின்னர் நீக்கப்படும் என மலேசிய தேர்தல் ஆணையர் டான்ஶ்ரீ முகம்மட் ஹாசிம் அப்துல்லா கூறினார்.
14ஆவது பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 2003ஆம் ஆண்டில் காலமான எம்.எம்.நாராயணன் நாயர் பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து அவரின் மகள் தெலுக் ஆயர் தாவாரில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இவ்விவகாரம் சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தபோது அதில் தம்முடைய தந்தையின் பெயர் இல்லை என்றும் இவ்வாண்டு தந்தையின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை கண்டு போலீசில் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த டான்ஶ்ரீ முகம்மட் ஹாசிம், நன்கு ஆராயப்பட்ட பின்னர் அந்த பெயர் நீக்கப்படும் எனவும் இவருடைய மரணம் தொடர்பாக தேசிய பதிவிலாகாவிடம் முழு விவரத்தை கண்டறியாமல் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment