Monday, 9 April 2018

சுங்கை சிப்புட்டில் போட்டியிடுகிறார் கேசவன்?

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக யார் களமிறங்குவார்  என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ள நிலையில் நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்) வேட்பாளர் யார்? என்ற கேள்வியும் மேலோங்கியுள்ளது.

வரும் பொதுத் தேர்தலில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தனது பிஎஸ்எம் கட்சியின் 'கை' சின்னத்தில் போட்டியிடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் பிகேஆர் கட்சியின் வேட்பாளராக எஸ்.கேசவன் போட்டியிடலாம் என நம்பப்படுகிறது. தற்போது ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கேசவன் இம்முறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக்கூடும் என கூறப்படும் வேளையில் அது சுங்கை சிப்புட் தொகுதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

No comments:

Post a Comment