Wednesday, 2 May 2018
சுங்கை சிப்புட் தொகுதியை தேமு வெற்றி நிலைநாட்டுவோம்- இளங்கோவன்
ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள பாடுபடும் என சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து கூறினார்.
கடந்த இரு தேர்தல்களில் தேசிய முன்னணி இங்கு தோல்வி கண்ட போதிலும் இம்முறை வெற்றியை தக்கவைத்துக் கொள்ள போராட்டம் நடத்தும்.
கடந்த காலங்களை போன்ற சூழல் தற்போது இல்லாததால் இம்முறை தனக்கு சாதகமாக உள்ள வாய்ப்பை பயன்படுத்தி தேசிய முன்னணி மீண்டும் வெற்றியை நிலைநாட்டிக் கொள்ளும்.
தேசிய முன்னணி வேட்பாளராக இங்கு களமிறங்கியுள்ள டத்தோஶ்ரீ எஸ்.கே. தேவமணியை வெற்றியடையச் செய்ய இங்குள்ள மஇகா தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் களமிறங்கி பணியாற்றவுள்ளனர் என அவர் சொன்னார்.
இந்த தேர்தலில் 'வெற்றி' ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு மஇகா மட்டுமல்லாது தேசிய முன்னணியும் களமிறங்குவதால் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை வென்று காட்டுவோம் என இளங்கோ மேலும் சொன்னார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment