கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பிஎஸ்எம் கட்சி தனித்தே போட்டியிடவுள்ளது. பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர்ர் சிவராஜன் ஆறுமுகம் கூறினார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாகவே பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் சைஃபுடின் அப்துல்லா, பிகேஆர் கட்சியின் ஆர்.சிவராசாவுடன் பிஎஸ்எம் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது.
பிஎஸ்எம் கட்சிக்கு நியாயமான வாய்ப்புகள் வழங்கப்பட்டால்தான் அதனை ஏற்போம், அது இல்லையென்றால் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமே இல்லை பக்காத்தான் ஹராப்பானிடம் தெரிவித்து விட்டோம் என அவர் சொன்னார்.
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் பிகேஆர் சின்னத்தின் கீழ் போட்டியிடும் வாய்ப்பு பிஎஸ்எம் கட்சிக்கு வழங்கப்படும் என்பதால் நாங்கள் ஹராப்பான் கூட்டணியில் இணையவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
பொதுத் தேர்தலுக்கான நாள் நெருங்கி கொண்டிருப்பதால் இதற்கு மேலும் பிஎஸ்எம் கட்சி ஹராப்பான் கூட்டணியுடன் இணையாது என சிவராஜன் கூறினார்.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பிஎஸ்எம் கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment