Sunday, 8 April 2018

கெ அடிலான் சின்னத்தில் நம்பிக்கைக் கூட்டணி - துன் மகாதீர்



பாசீர் கூடாங் -
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி பிகேஆர் கட்சியின் சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது அறிவித்தார்.

நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய துன் மகாதீர், நம்பிக்கைக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நான்கு கட்சிகளின் வேட்பாளர்களும் ஒரே சின்னத்தின் (பிகேஆர் சின்னம்) கீழ் போட்டியிடவிருப்பதாக அறிவித்தார்.

பிகேஆர், ஜசெக, பெர்சத்து, அமானா ஆகிய நான்கு கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவது சாதாரண ஒன்றல்ல. குறிப்பாக ஜசெக கட்சி தனது 'ராக்கெட்' சின்னத்தை விட்டுக் கொடுத்து பிகேஆர் சின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ளது ஆட்சியை கைப்பற்ற வழிவகுக்கும் என கூறினார்.

இக்கருத்தரங்கில் உரையாற்றியபோது துன் மகாதீர், தான் அணிந்திருந்த சீருடையில் பிகேஆர் சின்னத்தை பதித்திருந்தார்.

No comments:

Post a Comment