தஞ்சோங் மாலிம்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்காய் சட்டமன்றத் தொகுதியில் மஇகாவிடம் மீண்டும் ஒப்படைக்கப்படலாம் என தஞ்சோங் மாலிம் தேமு தலைவர் டத்தோ முகமட் குஷாய்ரி அப்துல் தாலிப் கூறினார்.
2008ஆம் ஆண்டில் தோல்வி காணும் வரை அத்தொகுதியில் மஇகா போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆயினும் 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மசீச போட்டியிட்டு தோல்வி கண்டது. இவ்விரு தேர்தல்களிலும் ஜசெகவிடம் தோல்வி கண்டது.
இவ்விவகாரம் தொடர்பில் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீருடனான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இங்கு யார் வேட்பாளராக போட்டியிடுவார் என்பது தெரியவில்லை. அதனை
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் ஆகியோரின் முடிவுக்கு விட்டு விடுவதாக டத்தோ குஷாய்ரி தெரிவித்தார்.
Advertisement
No comments:
Post a Comment