Thursday 19 April 2018
பண உதவி நாடியவர்களுக்கு டத்தோஶ்ரீ வேள்பாரி உதவிக்கரம் நீட்டினார்
ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
நோயால் பாதிப்புற்று அடிப்படை உதவிகள் பெற போராடிக் கொண்டிருந்த இருவருக்கு மஇகாவின் தலைமை பொருளாளர் டத்தோஶ்ரீ எஸ்.வேள்பாரி உதவிக்கரம் நீட்டினார்.
தாமான் துன் சம்பந்தனைச் சேர்ந்த கந்தசாமி சுப்பிரமணியம் சர்க்கரை நோயால் பாதிப்புற்று வலது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ரப்பர் காலை பொருத்துவதற்கு பண உதவி கோரியிருந்தார்.
அவரின் நிலையை உணர்ந்து தாமான் துன் சம்பந்தன் கிளைத் தலைவர் இளங்கோவன் சுப்பிரமணியம் முயற்சியில் டத்தோஶ்ரீ வேள்பாரியின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டது. அதன் அடிப்படையில் டத்தோஶ்ரீ வேள்பாரி கணிசமான நிதிஉதவியை வழங்கினார்.
மேலும், தாமான் கிளேடாங்கைச் சேர்ந்த முனீஸ்வரன் கங்கமுத்துவின் மனைவி காது கேளாமை பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள சூழலில் காது கேட்கும் சாதனத்தை பொருத்துவதற்கு சுங்கை சிப்புட் தொகுதி மஇகாவின் உதவியை நாடியிருந்தார்.
அவரின் பிரச்சினையும் டத்தோஶ்ரீ வேள்பாரியின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்ட சூழலில் அதற்கான நிதியுதவியை தொகுதி மஇகா தலைவரிடம் வழங்கியிருந்தார்.
டத்தோஶ்ரீ வேள்பாரி வழங்கிய நிதியை இவ்விருவரிடமும் சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து வழங்கினார். உடன் மஇகா கிளைத் தலைவர்கள் இருந்தனர்.
உதவியை பெற்றுக் கொண்ட இருவரும் டத்தோஶ்ரீ வேள்பாரிக்கும் தொகுதி மஇகாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment