Tuesday 1 May 2018
டத்தோஶ்ரீ தேவமணிக்கு பெருகும் 'ஆதரவு அலை'
ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
நான்கு முனைப் போட்டியை ஏற்படுத்தியுள்ள சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணிக்கான 'ஆதரவு அலை' வீச தொடங்கியுள்ளது.
இங்கு தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதால் அவருக்கான 'வெற்றி வாய்ப்பு' பிரகாசமாக காணப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியை ஆதரித்தும் எவ்வித முன்னேற்றமும் காணபடாததால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி இவ்வாண்டு தேசிய முன்னணிக்கு 'ஆதரவு அலை'யாக மாறியுள்ளது.
டத்தோஶ்ரீ தேவமணியை இளைஞர்கள், முதியவர்கள் அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்க தொடங்கியுள்ளதால் டத்தோஶ்ரீ தேவமணியின் 'வெற்றி' கிட்டத்தட்ட உறுதியாக்கப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment