Saturday, 7 April 2018
ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலய நிலம் அரசாங்க பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது- தலைவர் ஆர்.வி.சுப்பையா
புனிதா சுகுமாறன் -
ஈப்போ-
ஈப்போ கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கான நிலம் அரசாங்க பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது என ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் ஆர்.வி.சுப்பையா கூறினார்.
8,187 சதுர அடி கொண்ட நிலம் கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் அறிந்திடாமல் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்படுவதை அனைத்துத் தரப்பினரும் தவிர்க்க வேண்டும்.
பேராக் மாநில நில அலுவலகம் கடந்த 29.6.2010ஆம் ஆண்டே ஈப்போ கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு நிலத்திற்கு உத்தரவாதம் கொடுத்துள்ளதை பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
இவ்விவகாரம் தொடர்பில் நாளிதழ்களில் அறிக்கை விடுவதற்கு முன்னர் ஆலய நிர்வாகத்துடன் கலந்து பேசுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்தாக ஆர்.வி.சுப்பையா தெரிவித்தார்.
ஈப்போ கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியம் ஆலயத்திற்கு நிலப்பட்டா வழங்கப்படாதது ஏன்? என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் கேள்வி எழுப்பியிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment