Sunday 22 April 2018

தீவிர நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது சுங்கை சிப்புட் தேசிய முன்னணி


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் மஇகாவின் பாரம்பரியமிக்க தொகுதியாக கருதப்படும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி தனது தீவிர நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

மஇகா மகளிர் பிரிவு துணைத் தலைவியும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளருமான திருமதி தி.தங்கராணி   தொகுதி மஇகாவினருடன் இணைந்து ஆக்ககரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

மக்களை சந்திப்பது, தேர்தல் நடவடிக்கைகள அறைகளை திறந்து வைப்பது, மக்கள் பிரச்சினைகளை  கேட்டறிவது, மக்கள் நடவடிக்கைகளில் களமிறங்குவது என ஆக்ககரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

சுங்கை சிப்புட்  தொகுதி மஇகாவினர், கிளைத் தலைவர்களின் சந்திப்புக் கூட்டங்கள், தேசிய முன்னணி தலைவர்களுடனான சந்திப்பு என திருமதி தங்கராணி மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் தேர்தல் களம் பரபரப்பை கூட்டியுள்ளது.



No comments:

Post a Comment