Tuesday, 3 April 2018

குரங்கின் 'விபரீத' செயல்; தாயிடமிருந்து பறிக்கப்பட்ட குழந்தை பிணமாக மீட்பு


கட்டாக்-
தாயிடமிருந்து பச்சிளம் குழந்தையை பறித்துச் சென்ற குரங்கை தேடும் பணி பணி தோல்வியில் முடிந்ததோடு அக்குழந்தை பிணமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிறந்து 16 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்தபோது குரங்கு பறித்துச் சென்றது.   கட்டாக் மாவட்டத்தின் தலாபஸ்தா எனுமிடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் குரங்கை தேடும் பணியில்  வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் குரங்கை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், அருகிலுள்ள கிணறு ஒன்றில் குழந்தை பிணமாக மிதந்துக் கொண்டிருப்பதை கண்ட அதிகாரிகளும் குழந்தையின் தாயும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

15 அடி ஆழம் கொண்ட கிணற்றில் கிடந்த குழந்தையின் உடல் வெளியே கொண்டு வரப்பட்டது. குரங்கின் பிடியிலிருந்து வழக்கி குழந்தை கிணற்றில் விழுந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டன. குழந்தை இறந்து 24 மணி நேரம் ஆகியிருக்கக்கூடும் என்ன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment