Thursday 5 April 2018

கான்கிரீட் தூண் விழுந்து ஆடவர் பலி


குளுவாங்-
லோரியில் ஏற்றி செல்லப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் விழுந்து வங்காளதேச ஆடவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் பத்து பகாட்- மெர்சிங் சாலையின் 60ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் கான்கிரீட் தூண்களை ஏற்றி சென்ற லோரி வளைவு  எடுத்தபோது சிமெண்ட் கான்கிரீட் ஒன்று குழாய் பழுது பார்த்துக் கொண்டிருந்த வங்காளதேச ஆடவர் மீது விழுந்தது.

இதில் வங்காளதேச பிரஜையான அமிர் மாமுட் (41) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மிக அருகிலேயே கான்கிரீட் தூண் விழுந்ததால் தப்பிக்க வழியில்லாமல் அவ்வாடவர் மரணமுற்றார் என மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் முகமட் லஹாம் கூறினார்.


No comments:

Post a Comment