Wednesday 4 April 2018

திரைப்படமாகிறது வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு


சென்னை-
தமிழீழம் அமைய போராட்டம் நடத்திய  தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது.

தமிழீழம் அமைய இலங்கை அரசுடன் ஆயுதமேந்தி போராட்டம் நடத்தியவர்  மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போருடன் முடிவுக்கு வந்தது ஈழப் போராட்டம்.

தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கவுள்ளார் இயக்குனர் ஜி வெங்கடேஷ்.  'நீலம்', 'உனக்குள் ஒருவன்' போன்ற படங்களை இயக்கிய  வெங்கடேஷ் குமாரே இப்படத்தை தன்னுடைய ஸ்டூடியோ 18 நிறுவனத்தின் மூலம் இயக்கி தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் விரைவில் அறிவிக்கப்பட்டு படபிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment