Thursday, 5 April 2018
நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு சட்டங்கள் அகற்றப்படும்- துன் மகாதீர்
கோலாலம்பூர்-
நம்பிக்கைக் கூட்டணி புத்ராஜெயாவை கைப்பற்றியது 2018 பொய் செய்தி தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களை அகற்றும் என அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான துன் மகாதீர் முகமது கூறினார்.
1948 தேச நிந்தனைச் சட்டம், 1959 குற்ற தடுப்பு சட்டம், 1971 பல்கலைக்கழகம், கல்லூரி சட்டம், 1984 அச்சிடுதல், பதிப்பக சட்டம், 2016 தேசிய பாதுகாப்பு மன்றம் போன்றவை அகற்றப்படும்.
மேலும், குற்றவியல் சட்டம், தகவல் தொடர்பு, பல்லூடக சட்டம், பாதுகாப்ப் குற்றவியல் சட்டம், 2012 அமைதி பேரணி சட்டம், 2015 வன்முறை தடுப்பு சட்டம் போன்றவை ஒடுக்கப்படும்.
மக்களுக்கு சாதகமில்லாத சட்டங்கள் முற்றாக அகற்றப்படும் என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரிபூமி கட்சியின் அவைத் தலைவருமான துன் மகாதீர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment