Friday, 6 April 2018

ஒரே சின்னத்தில் 'நம்பிக்கைக் கூட்டணி'; சின்னம் நாளை அறிவிக்கப்படும்- துன் மகாதீர்


புத்ராஜெயா-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக நம்பிக்கைக் கூட்டணியில் (பக்காத்தான் ஹராப்பான்) இடம்பெற்றுள்ள நான்கு கட்சிகளும் ஒரே சின்னத்தை பயன்படுத்தும் என அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான துன் மகாதீர் முகம்மது கூறினார்.

ஒரே சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஏதுவாக எந்த கட்சியின் சின்னம் பயன்படுத்தப்படும் என்பது நாளை ஜோகூர், பாசீர் கூடாங்கில் நடைபெறும் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

ஒரே சின்னத்தை  பயன்படுத்தி ஒரு கூட்டணியின் கீழ்  போட்டியிடுவதற்கு  ஏதுவான நம்பிக்கைக் கூட்டணியை பதிவு செய்யும் நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது.

நம்பிக்கைக் கூட்டணியில் பிகேஆர், ஜசெக, பிபிபிஎம், அமானா ஆகிய நான்கு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment