Sunday, 22 April 2018
பாலியில் துயரம்; சாலை விபத்தில் மருத்துவத்துறை மாணவி தர்ஷினி பலி
கோலாலம்பூர்-
இந்தோனேசியாவில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் மருத்துவத் துறை மாணவி குமாரி வி.தர்ஷினி (வயது 24) சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலை 6.45 மணியளவில் தனது இரு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் டென்பசார் பகுதிக்கு சென்றுக் கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட லோரியை மோதி விபத்துக்குள்ளானதில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
ஷா ஆலம், ஶ்ரீ மூடாவைச் சேர்ந்த தர்ஷினி தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் சம்பவ இடத்திலேயே மரணமுற்றார். இவர் இங்குள்ள உதயானா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
தர்ஷினியுடன் பயணம் செய்த இரு நண்பர்களில் ஒருவரான சிவமர் கடுமையான காயங்களுக்கு இலக்காகி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விருவரும் பாலியைச் சுற்றி பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.
தற்போது டென்பசாரிலுள்ள பொது மருத்துவனமனையில் வைக்கப்பட்டுள்ள தர்ஷினியின் உடல் மலேசியாவுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment