புத்ராஜெயா-
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் துன் முகமது தலைமை வகித்துள்ள பார்ட்டி பெரிபூமி பெர்சத்து கட்சிக்கு (பிபிபிஎம்) தேசிய சங்கங்களின் பதிவிலாகா (ஆர்ஓஎஸ்) 'தற்காலிக தடை' விதித்துள்ளது.
வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் முக்கிய ஆவணங்களை அக்கட்சி ஆர்ஓஎஸ்-இடம் ஒப்படைக்க தவறியதால் இந்த தற்காலி தடை விதிக்கப்படுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆர்ஓஎஸ் தெரிவித்தது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் ஆண்டு பொதுக்கூட்டம் தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் அளித்த புகாரை அடுத்து ஆர்ஓஎஸ் சில முக்கிய ஆவணங்களை கூறியிருந்தது.
ஆயினும் அந்த ஆவணங்களை ஒப்படைக்க தவறியதால் பிபிபிஎம் கட்சி தற்காலிக தடை விதிக்கப்படுவதாக அது கூறியது.
மேலும் கடந்தாண்டு ஜூலை மாதம் விண்ணப்பிக்கப்பட்ட பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை அங்கீகரிக்காததற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும் என ஆர்ஓஎஸ் கூறியுள்ளது.
No comments:
Post a Comment