Sunday, 29 April 2018
'எம்ஜிஆர்' வேடமிட்டு வந்த சுயேட்சை வேட்பாளரின் மனு நிராகரிப்பு
ஜோர்ஜ்டவுன் -
இன்று நடைபெற்ற வேட்புமனுவின் போது 'எம்ஜிஆர்' போல வேடமிட்டு வந்த ஆடவரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
பயான் பத்து நாடாளுமன்றத் தொகுதிக்கும் பத்து உபான் சட்டமன்றத் தொகுதிக்கும் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார் சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரா அம்மாசி.
ஆனால் கடந்த பொதுத் தேர்தலின்போது பத்து உபான் தொகுதியில் போட்டியிட்டு வைப்புதொகையை இழந்த ராஜேந்திரா அம்மாசி, தனது செலவீன அறிக்கையை தாக்கல் செய்யாததால் இம்முறை அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக பாயான் பாரு தேர்தல் ஆணையத்தின் அலுவலக அதிகாரி முகமட் ஜமில் முகமட் தெரிவித்தார்.
இன்று வேட்புமனு மையத்திற்கு வந்த ராஜேந்திரா அம்மாசி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான 'எம்ஜிஆர்' என அழைக்கப்படும் எம்.ஜி.ராமசந்திரனை போல் வேடமிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment