Tuesday 1 May 2018

தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரிலேயே டாக்டர் ஶ்ரீராம் தடுக்கப்பட்டார் - போலீஸ்



கோலாலம்பூர்-
ரந்தாவ்  சட்டமன்றத் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணியி  சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த டாக்டர் ஶ்ரீராமை தேர்தல்  ஆணையத்தின்  உத்தரவுக்கிணங்க போலீஸ் தடுத்ததாக படைத் தலைவர்  டான்ஶ்ரீ முஹம்மட் ஃபுசி ஹருண் தெரிவித்தார்.

சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது டாக்டர் ஶ்ரீராம் தடுக்கப்பட்டது  குறித்து கருத்துரைத்த அவர், இவ்விவகாரம் தொடர்பில் ஶ்ரீராம் உட்பட இருவரிடமிருந்து புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

டாக்டர் ஶ்ரீராமை வேண்டுமென்றே போலீஸ் தடுத்ததாக கூறப்படும்
குற்றச்சாட்டை மறுத்த அவர், தேர்தல் அதிகாரியிடமிருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின் பேரிலேயே தடுத்ததாக டான்ஶ்ரீ முஹம்மட் ஃபுசி கூறினார்.

No comments:

Post a Comment