கோலாலம்பூர்-
ஒரே மலேசியா உதவித் தொகை (பிரிம்) கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.
ஏப்ரல் 2 தொடங்கி மே 31ஆம் தேதி வரை இந்த முறையீட்டை செய்யலாம் என டுவிட்டர், ஃபேஸ்புக் வலைதலங்களில் குறிப்பிட்ட டத்தோஶ்ரீ நஜிப், அருகிலுள்ள உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் கிளை அலுவலகங்களில் முறையிடலாம்.
இது தொடர்பான மேல் விவரங்களை http://ebrim.hasil.gov.my என்ற இணைய அகப்பக்கத்தில் தெரிந்து கொள்வதோடு தங்களின் நிலையை சரி பார்த்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
No comments:
Post a Comment